செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஓசூர்:
செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகள் காவியா ஸ்ரீ (வயது 14). இவர் ஓசூர் அரசனட்டி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி காவியா ஸ்ரீ, செல்போனில் அதிகமாக விளையாடியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் தங்கள் மகளை கண்டித்தனர்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த சிறுமி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த மாணவியை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.