தேன்கனிக்கோட்டையில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது-பெற்றோருக்கு போலீஸ் வலைவீச்சு

ராயக்கோட்டை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த முடிதிருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக தொழிலாளியின் பெற்றோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-13 16:24 GMT
தேன்கனிக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த முடிதிருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக தொழிலாளியின் பெற்றோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முடிதிருத்தும் தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). முடிதிருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
இவர் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் (50), தாயார் வசந்தா (49) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 
கைது
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ரேணுகா தேன்கனிக் கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சம்பூரணம் விசாரித்து சக்திவேலை கைது செய்தார். 
அவர் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போக்சோ பிரிவிலும், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேலின் தந்தை செல்வம், தாயார் வசந்தா ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்