கந்தம்பாளையம் அருகே ரிக் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கந்தம்பாளையம் அருகே ரிக் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை;
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 53). ரிக் டிரைவர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (45). இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சுப்புலட்சுமி நல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.