நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,777 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,777 ஆக அதிகரிப்பு

Update: 2021-11-13 16:07 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.
37 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தின் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 52,742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 740 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 777 அதிகரித்து உள்ளது.
462 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். ்மாவட்டத்தில் இதுவரை 5 1 ஆயிரத்து 812 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 503 பேர் இறந்து விட்ட நிலையில் 462 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்