சாக்கடை கழிவுநீரை உறிஞ்சி அகற்ற நவீன வாகனம்
சாக்கடை கழிவுநீரை உறிஞ்சி அகற்ற நவீன வாகனம்;
கோவை
கோவை புலியகுளம் விநாயகர் கோவில் பின்புறம் உள்ள பகுதிகளில் சாக்கடை கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீரை உறிஞ்சி அடைப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி யில் மாநகராட்சி சார்பில் "சூப்பர் சக்கர்" வாகனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இதை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது
கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை சரி செய்து, கழிவுநீரை உறிஞ்சுவதற்கு அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த வாகனம் மணிக்கு 85 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சும் திறன் கொண்டது. அந்தகழிவுநீரை மறுசுழற்சி செய்து உபயோகிக்கும் அமைப்பு கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.