மீஞ்சூர் அருகே இறால் பண்ணை குட்டையில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு

மீஞ்சூர் அருகே இறால் பண்ணை குட்டையில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update: 2021-11-13 06:23 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவரது உறவினர் ஒருவர் இறால் பண்ணை அமைத்து உள்ளார். கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பண்ணையை பார்க்க சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் இறால் பண்ணை குட்டைக்கு அருகே உள்ள கழிமுகபகுதியில் தேடிய போது சேற்றில் சிக்கிய நிலையில் குமார் பிணமாக மீட்கப்பட்டார். இறால் பண்ணை குட்டையில் தவறி விழுந்தவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்