4 பசுமாடுகள், 2 ஆடுகள் சாவு

மெலட்டூர் அருகே திடீரென 4 பசுமாடுகள், 2 ஆடுகள் இறந்தன. மர்ம நோய் தாக்குதல் காரணமாக கால்நடைகள் உயிரிழந்ததா? என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

Update: 2021-11-12 20:29 GMT
மெலட்டூர்;
மெலட்டூர் அருகே திடீரென 4 பசுமாடுகள், 2 ஆடுகள் இறந்தன. மர்ம நோய் தாக்குதல் காரணமாக கால்நடைகள் உயிரிழந்ததா? என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். 
பசுமாடுகள் சாவு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு, மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் கால்நடைகள்பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 பசுமாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்து உள்ளன. இடையிறுப்பு கிராமத்தை சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசு மாடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.  ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் உயிரிழந்தது. 
மர்ம நோய் தாக்குதலா?
மேலும் அதே ஊரை சேர்ந்த ஜெயாகந்தசாமி என்பவரது 2 ஆடுகளும் உயிரிழந்தன. இடையிறுப்பு, ஒன்பத்துவேலி ஊராட்சி பகுதியில். மர்மநோய் தாக்குதலால் தொடர்ச்சியாக கால்நடைகள் இறந்து வருவது அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நோய் தாக்குதல் காரணமாக கால்நடைகள் உயிரிழந்ததா? என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்