முருகன் கோவில் கும்பாபிஷேகம்

முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2021-11-12 19:52 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் செல்வகணபதி, வள்ளி- தெய்வானை சமேத செந்தில்முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை மற்றும் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்