பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் ஒருவர் கைது

பாளையங்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-11-13 01:14 IST
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் மோகனராம் (வயது 27). இவர் கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தாலங்குறிச்சி பகுதியை சேர்ந்த கணபதி என்ற கணேசன் (23), பாலகிருஷ்ணன் (27) ஆகியோர் வந்தனர். அவர்கள் செல்போன் செயலி மூலம் ரூ.500 அனுப்புவதாகவும், அதில் ரூ.200-க்கு பெட்ரோலும், மீதி ரூ.300 ரொக்க பணமாக தரும்படி கேட்டுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மோகனராமை 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே பாலகிருஷ்ணனை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கணபதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்