மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்

மாவட்டம் முழுவதும் இன்று ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-11-12 19:28 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு மாவட்டத்தில் பஞ்சாயத்து, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் என அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிமுகாம் நடைபெற உள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா இல்லாத விருதுநகர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

மேலும் செய்திகள்