மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-12 19:23 GMT
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மாரியம்மன் கோவில் 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு்ககு அருள்பாலித்தார். 
சாமி தரிசனம் 
இதில் விருதுநகர் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்