துறையூர், நவ.13-
துறையூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் வரையாறு அருவி உள்ளது. தற்போது பச்சை மலையில் அதிகளவில் மழை பெய்து வருவதால் வரையாறு அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் வரையாறு அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் வரையாறு ஓடை வழியாக செல்கிறது. இந்த ஓடை புளியஞ்சோலை போன்று இருப்பதால் துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகிறார்கள். இந்த ஓடைக்கு செல்வதற்கு போதுமான சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. அது மட்டுமின்றி வரையாறு ஓடையில் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் மற்றும் வேலிகள் இல்லை. வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த பகுதியை பொதுமக்கள் பயன் படுத்துவதற்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.