வேன் மோதி முதியவர் பலி
காரியாபட்டி அருகே வேன் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள சத்திரம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (வயது 71). பால் வியாபாரி. இவர் ஆண்மைபெருக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்ல மாமரம் பஸ்நிறுத்தம் அருகே காரியாபட்டி - நரிக்குடி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன் முத்துமணி மீது மோதியது. இதில் முத்துமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் வலையங்குளத்தை சேர்ந்த முத்துமுருகன் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.