டீ, காபி, பலகாரம் விலை உயர்கிறது
திருச்சி மாநகரில் வருகிற 15-ந் தேதி முதல் டீ, காபி மற்றும் பலகாரம் விலை உயர்கிறது என்று வர்த்தகர் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திருச்சி, நவ.13-
திருச்சி மாநகரில் வருகிற 15-ந் தேதி முதல் டீ, காபி மற்றும் பலகாரம் விலை உயர்கிறது என்று வர்த்தகர் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட டீ, காபி வர்த்தகர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க அமைப்பு செயலாளர் எஸ்.ராவுத்தர்ஷா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட டீக்கடை வியாபாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்ய வில்லை. இனிமேலாவது டீக்கடை மற்றும் சிறு வியாபாரிகளை கணக்கெடுத்து உதவிட வேண்டும்.
டீ, காபி விலை உயர்கிறது
கடந்த ஓராண்டில் (2020-2021) ரூ.800-க்கு விற்பனையான 50 கிலோ எடைகொண்ட சர்க்கரை தற்போது ரூ.1,945 என்றும், ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையான 24 கிலோ எடைகொண்ட டீத்தூள் தற்போது ரூ.12 ஆயிரம் என்றும், ரூ.850-க்கு விற்பனையான வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.2,030 என்றும், ரூ.800-க்கு விற்பனையான 10 பாக்கெட் எண்ணெய் தற்போது ரூ.1,350 என்றும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது.
எனவே, விலைவாசி உயர்வு காரணமாக வருகிற 15-ந் தேதி முதல் ஒரு டீ, காபி மற்றும் பார்சல் டீ ஒவ்வொன்றுக்கும் ரூ.2 உயர்த்தப்படுகிறது. இதுபோல பலகாரம் விலையும் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் துணைத்தலைவர் அபுல்ஹகன், ஆலோசகர் சார்லஸ்சாமி மற்றும் ஏர்போர்ட் முருகானந்தம், பாரி உள்ளிட்ட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.