வீடுகளை சூழ்ந்த மழைநீர்

காரைக்குடி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2021-11-12 18:53 GMT
காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

 சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக மழை பெய்து வருகிறது. காரைக்குடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காளவாய் பொட்டல், தந்தை பெரியார் நகர் பகுதி, அரசு பழைய மருத்துவமனை பகுதி, பாரதியார் தெரு, அன்னை தெரசா தெரு, என்.எஸ்.கே.தெரு, மவுராசிஸ் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளை மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
அந்த தண்ணீர் வெளியேற வழி இல்ைல. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் கொசுக்கடியிலும், அதிகளவில் பாம்புகள் நடமாட்டத்திலும் வசித்து வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
காரைக்குடி காளவாய் பொட்டல், தந்தை பெரியார்நகர் பகுதி மற்றும் 30 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறும் வகையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளைச் சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் முற்றிலும் வடிவதற்கு 15 நாட்களுக்கும் மேல் ஆகிறது. தற்போது கொசு தொல்லை, விஷ பூச்சிகளால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்