தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-12 18:26 GMT
அரியலூர்
மண்ணை கொட்டி அடைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் 
திருச்சி மாவட்டம், கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் மண்ணை கொட்டி அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லவும், மழைநீர் செல்லவும் வழியின்றி மழைபெய்யும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்  டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே கழிவுநீரை அகற்ற  உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி. 

குப்பைகளால் நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் தாயனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவர்களுக்கு  நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  தாயனூர், திருச்சி. 
இதேபோல் திருச்சி 18-வது வார்டு நடுகல்லுகர தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நடுகல்லுகர தெரு, திருச்சி. 

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி, கீழ்அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் இந்த குரங்குகள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை பயமுறுத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலு, கீழ்அக்ரஹாரம், திருச்சி. 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் கிராமம் வடக்கு தெருவில் உள்ள காலனியில்  முக்கிய கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால் அமைக்கவில்லை.  கழிவுநீர் மற்றும் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பத்மநாதன், மால்வாய், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதி 7-வது வார்டு ஜோதி நகர், பவுலா நகர், டைமன் நகர், சிற்பி நகர் ஆகிய பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் இத்துடன் கழிவுநீர் கலந்துள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சையது முஸ்தபா, அரியமங்கலம், திருச்சி.

சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், 65-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா ந௧ர் பகுதியில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கரன், இந்திரா நகர், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம், மணிகண்டம், மட்டபாறைபட்டி அண்ணாநகர் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அண்ணாநகர், திருச்சி. 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் காலனி தெருவிற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து கிராவல் மண் கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மருவத்தூர், பெரம்பலூர்.
இதேபோல் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கேந்திர சேவா மையக் கட்டிடம் (வி.பி.ஆர்.சி)  செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேவா மையக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், செங்குணம், பெரம்பலூர்.

எலும்பு கூடான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கல்குடிபஞ்சாயத்து கொடியன்காட்டுப்பட்டி வயல் வெளியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த  மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொடியன்காட்டுப்பட்டி, புதுக்கோட்டை. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் கிராமம் கீழத்தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையின் இருபுறங்களிலும் சரியான முறையில் வடிகால் வசதி அமைக்காத காரணத்தால்  கடந்த 5 நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளன. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் நடந்து செல்லகூட சிரமப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வெற்றியூர், அரியலூர். 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், தா. பழுர் அருகில் உள்ள காரைக்குறிச்சி ஊராட்சி, அருள்மொழி காலனித் தெருவில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை நீருடன் கலந்த கழிவுநீர் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அருள்மொழி காலனித்தெரு, அரியலூர். 

வங்கி வசதி வேண்டும் 
கரூர் மாவட்டம்,  கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தை சுற்றி மாவத்தூர், முள்ளிப்பாடி கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வங்கி வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் வங்கி கடன் பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் வங்கி அமைக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கி நிர்வாகிகள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 சங்கரசுப்பு, பாலவிடுதி, கரூர். 

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர்  ஊராட்சி 3-வது வார்டு பள்ளிவாசல் மேற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வி.களத்தூர், பெரம்பலூர். 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் கிராமம் வடக்கு தெருவில் உள்ள காலனியில்  முக்கிய கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால் அமைக்கவில்லை.  கழிவுநீர் மற்றும் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பத்மநாதன், மால்வாய், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், 65-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா ந௧ர் பகுதியில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கரன், இந்திரா நகர், திருச்சி. 

இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தங்கி தாலுகா  நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட களக்குடிதோப்பு மருத்துவர் காலனியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் தற்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மழைக்காலம் என்பதினால் வீடுகள் ஒழுவுகின்றன. இந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், களக்குடிதோப்பு, புதுக்கோட்டை. 

தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால் 
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் உள்ள குளத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த  குளத்தூர் கீழத்தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்குதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குளத்தூர், புதுக்கோட்டை. 

பழுதடைந்த நிழற்குடை 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா சுக்கிரன் விடுதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு  27 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து இருக்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேது மாதவன், சுக்கிரன் விடுதி, புதுக்கோட்டை. 


மேலும் செய்திகள்