நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை; கொல்லிமலையில் 55 மி.மீட்டர் பதிவானது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கொல்லிமலையில் அதிகபட்சமாக 55 மி.மீட்டர் மழை பதிவானது.
நாமக்கல்:
பரவலாக மழை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. அதிகபட்சமாக கொல்லிமலையில் 55 மி.மீட்டர் மழை பதிவானது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை-55, புதுச்சத்திரம்-42, சேந்தமங்கலம்-38, ரஸ்ஸ்ாசிபுரம்-34, திருச்செங்கோடு-24, குமாரபாளையம்-21, மங்களபுரம்-17, நாமக்கல்-15, எருமப்பட்டி-14, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-12, மோகனூர்-5, பரமத்திவேலூர்-4. மாவட்டத்தில் மொத்தம் 281 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
சாரல்
இதனிடையே நேற்று காலை நாமக்கல், நல்லிபாளையம், புதன்சந்தை மற்றும் புதுச்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, குளிர்ந்த காற்று வீசியது.
இதனால் காலை கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே சிலர் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.