சங்கராபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலி
சங்கராபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சதிஷ்(வயது 4½). இவன் நேற்று காலை வீ்ட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் சதீசை தேடினர். அப்போது ரோட்டின் ஓரம் உள்ள கிடங்குடையாம்பட்டு ஏரி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டு மீன்வலையில் சிக்கிக்கொண்டிருந்த அவனை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்துவி்டடதாக தெரிவித்தனர். இதை அறிந்த அவனது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்தலி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.