வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2200 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

மயிலம் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2,200 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-12 17:10 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே செண்டூரில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 பேரல்களில் மண்எண்ணெய் இருந்தது. ஆனால் அந்த மண்எண்ணெயை எடுத்துவருவதற்கான உரிய ஆவணம் இல்லை. 

3 பேர் கைது 

இதையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பாண்டூர் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் அஜித்(26), சேஷன் மகன் தாஸ்(38), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பரஞ்ஜோதி மகன் சிவலிங்கம்(42) ஆகியோர் என்பதும், சென்னையில் இருந்து மண்எண்ணெய்யை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2,200 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்