விடுபட்டவர்களுக்கு வீடு தேடிச்சென்று கொரோனா தடுப்பூசி

காரைக்காலில் நலவழித் துறை சார்பில் விடுபட்டவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.;

Update: 2021-11-12 17:02 GMT
காரைக்கால், நவ.
காரைக்காலில் நலவழித் துறை சார்பில் விடுபட்டவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில்  மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அரசு பொதுமருத்துவமனை மற்றும் அனைத்து நலவழித்துறை மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து, 69 ஆயிரத்து 497 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வீடு தேடிச்சென்று...
இந்தநிலையில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கீடுடன் விடுபட்டவர்களுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
அதன்படி காரைக்கால் எம்.எம்.ஜி. நகரின் ஒரு வீட்டில், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் நேரடி பார்வையில், சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் வருகிற 30-ந்தேதி வரை எங்கள் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவார்கள். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்