போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
மகளின் திருமணத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தாா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள ராவணம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி(வயது 58). இவர், செங்கல்பட்டு ஆயுதப்படையில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது மகள் சாருமதியின் திருமணத்திற்காக கடந்த மாதம் 27-ந்தேதி சொந்த ஊருக்கு வந்தார். நேற்று திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பழனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.