உளுந்தூர்பேட்டை அருகே தனித்தனி சம்பவம் நீரில் மூழ்கி முதியவர் உள்பட 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே தனித்தனி சம்பவம் நீரில் மூழ்கி முதியவர் உள்பட 2 பேர் பலி

Update: 2021-11-12 16:54 GMT
உளுந்தூர்பேட்டை

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் (வயது 51) என்பவர் நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்(75) என்பவர் நேற்று மதியம் புத்தநந்தல் தடுப்பணை பகுதில் மீன் பிடிப்பதற்காக வலை கட்ட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட சுப்பிரமணியன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்