ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு

விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-11-12 16:52 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 67). இவர் சுகாதாரத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10-ந் தேதியன்று இவரது குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர்.
பின்னர் நேற்று காலை பக்தவச்சலம் குடும்பத்தினர், வாழப்பட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

நகை- பணம் திருட்டு

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு ஒன்றும், வெள்ளி குங்குமச்சிமிழ் ஒன்றும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்