உடுமலை நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 20 பேர் வெள்ள நிவாரணப்பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுசென்றனர்.
உடுமலை நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 20 பேர் வெள்ள நிவாரணப்பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுசென்றனர்.
உடுமலை,
உடுமலை நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 20 பேர் வெள்ள நிவாரணப்பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுசென்றனர்.
சென்னையில் வெள்ளம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் நிவாரணப்பணிகளுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சிதுப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி உடுமலை உள்ளிட்ட திருப்பூர் மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு செல்கின்றனர்.
உடுமலை நகராட்சி
அதன்படி உடுமலை நகராட்சியில் இருந்து ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு மேற்பார்வையாளர் ஆகியோர் தலைமையில், ஒரு டிரைவர் மற்றும் 20 துப்புரவுப்பணியாளர்கள் நேற்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப்பொருட்களுடன் நிவாரணப்பணிக்காக புறப்பட்டு சென்றனர்.
உடுமலையில் இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர்(கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரிசரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர். உடுமலையில் இருந்து புறப்பட்ட துப்புரவுப்பணியாளர்கள், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து அந்த நகராட்சி துப்புரவுப்பணியாளர்களுடன் இணைந்து சென்னைக்கு புறப்பட்டனர்.