கள் விற்பனை செய்தவர் கைது

கள் விற்பனை செய்தவர் கைது

Update: 2021-11-12 16:05 GMT
கள் விற்பனை செய்தவர் கைது
நெகமம்

நெகமம் அருகே  மூலனூரில் உள்ள நாயக்கர் தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நெகமம் சப்-இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 

அப்போது அதே ஊரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 47), என்பவர் கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனேபோலீசார் அவரை கைது செய்து  அவரிடம் இருந்த 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்