ஐ.டி.நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

ஐ.டி.நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

Update: 2021-11-12 15:53 GMT
ஐ.டி.நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் இந்துமதி (வயது 28). பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இவர்களது காதல் விவகாரம் இந்துமதியின் வீட்டிற்கு தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறைக்கு பொள்ளாச்சயில் உள்ள வீட்டிற்கு இந்துமதி வந்தார். 

பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் பெங்களூரு செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தி அடைந்த இந்துமதி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் வீட்டில் உள்ள முதல் மாடிக்கு சென்றார்.  பின்னர் அவர் அங்குள்ள அறையில், மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். 

இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைச்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்