தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-12 14:01 GMT
தூத்துக்குடி:
எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தராஜ் (வயது 23). இவர் கொலை வழக்கில் எட்டயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று முத்தையாபுரம் சுபாஷ்நகரை சேர்ந்த ராஜிலிங்கம் மகன் சங்கரேசுவரன் என்ற எலி (24) என்பவரும் ஒரு கொலை முயற்சி வழக்கில் முத்தையாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஆனந்தராஜ், சங்கரேசுவரன் என்ற எலி ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். இதனால் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்