மனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய பூசாரி
தக்கலை அருகே மனைவியின் கள்ளக்காதலனை பூசாரி ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே மனைவியின் கள்ளக்காதலனை பூசாரி ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரிவாள் வெட்டு
தக்கலை அருகே உள்ள முளகுமூடு சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் ஹெல்மெட் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டத் தொடங்கினர். வெட்டுகாயங்களுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட இருவரும் வெட்டினார்கள்.
நடுரோட்டில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர், வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சி
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றனர். இதற்கிடையே அவர் வெட்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனால், போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து முளகுமூடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மோதலில் ஈடுபட்டவர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் அரிவாள் ெவட்டு நடந்தது தெரிய வந்தது.
அதாவது, தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பூசாரிக்கு, 34 வயதுடைய மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கள்ளக்காதலுடன் ஓட்டம்
இந்த நிலையில், மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டில் இருந்து வெளியேறி கள்ளக்காதலுடன் சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தான் மனைவியின் கள்ளக்காதலன் முளமூடு பகுதிக்கு வருவதை அறிந்த பூசாரி, தனது நண்பருடன் அங்கு சென்று சரமாரியாக வெட்டி கொலை ெசய்ய முயற்சி செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடுரோட்டில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிைடயே பட்டப்பகலில் நடந்த அரிவாள் வெட்டு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.