தொடர் மழையால் அழுகும் சின்ன வெங்காயம்
தொடர் மழையால் சின்ன வெங்காயம் அழுகும் நிலை உள்ளது.
பெரம்பலூர்:
மாணவ, மாணவிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் வரை மழை பெய்யவில்லை. மதியத்திற்கு பிறகு அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
மேலும் தமிழகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், ெபரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சின்ன வெங்காய பயிர்கள் மழைநீரில் மூழ்கியும் மற்றும் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயங்கள் ஈரப்பதத்தாலும் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வீடு இடிந்தது
தொடர்ந்து பெய்த மழையால் ஆலத்தூர் தாலுகா, பொம்மனப்பாடி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் அகிலன் என்பவருடைய கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாடாலூர்-2, அகரம்சீகூர்-20, லெப்பைக்குடிகாடு-11, புதுவேட்டக்குடி-3, எறையூர்-1, கிருஷ்ணாபுரம்-3, தழுதாழை-3, வி.களத்தூர்-6, வேப்பந்தட்டை-5.