கல்யாண சுப்பிரமணியர் ஊஞ்சல் உற்சவம்
கோவிலில் கல்யாண சுப்பிரமணியர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கடந்த 4-ந் தேதி முதல் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சூரசம்ஹார விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் வைதீக முறைப்படி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. நேற்று ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி, அம்பாளுக்கு சோடசோபச்சாரம் செய்யப்பட்டது. பக்தர்கள் முருகப்பெருமானை நோக்கி பல்வேறு பதிகங்கள் பாடினர். ஊஞ்சல் உற்சவம் நடந்தபோது பெண்கள் ஊஞ்சல் பாடல்கள் பாடினர். பஞ்ச ஆரத்தி எடுத்து பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.