ரேஷன் அரிசியை அரைத்து மாவாக விற்ற மில்லுக்கு சீல்

அரியமங்கலத்தில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக விற்ற மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-11-11 20:58 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலத்தில் அல்லாபிச்சை(வயது 45) என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த மாவு மில்லில் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் மற்றும் தாசில்தார் கருணாகரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அங்கு ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த 8 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாவு மில்லை அதிகாரிகள் பூட்டி `சீல்' வைத்தனர். அல்லாபிச்சையும் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் அல்லாபிச்சையின் உறவினர் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான குடோனில் 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்