வீட்டின் மீது ஆலமரம் விழுந்தது

தொடர் மழையின் காரணமாக பெண் வீட்டின் மீது ஆலமரம் விழுந்தது.

Update: 2021-11-11 20:25 GMT
திருவெறும்பூர்
திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. இந்தநிலையில் திருவெறும்பூர் ஒன்றியம், பத்தாளப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த கீழமாங்காவனம் ரயில்வே கேட் அருகே வசித்த பாண்டியனின் மனைவி மாரியம்மாளின்(வயது 50) வீட்டின் மீது அருகில் உள்ள ஆலமரமானது விழுந்ததில் வீடு பலத்த சேதம் அடைந்தது. இதில், அவர்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஊராட்சி மன்ற தலைவர் ரீனா ஜவான் கிளாரட் மற்றும் துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டது. 
சுவர் இடிந்து விழுந்தது
இதேபோல உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம், வலையப்பட்டி சாலையில் வசிக்கும் பழனிவேல்-சரோஜா தம்பதியின் வீட்டின் ஒருபக்க மண் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்ததால் அவர்கள் உயிர் தப்பினர். கோட்டப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முரளிதரன், உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்