தோட்ட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்தது தொடர்பாக தோட்ட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் வடபத்துகுளம் அருகில் உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர் முருகசாமி தலைமையில் வனத்துறையினர், அந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி கொல்லப்பட்டது தெரிய வந்தது. அந்த தோட்டத்தில் காட்டுப்பன்றியின் மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளும் கிடந்தன. இதையடுத்து தோட்ட உரிமையாளரான தாமஸ் ஸ்டீபன் மெல்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.