மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-11 19:39 GMT
நெல்லை:

நெல்லை டவுன் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 26). இவர் சம்பவத்தன்று பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரிக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

அதில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது நெல்லை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்