பன்றி திருடிய 3 பேர் சிக்கினர்

விக்கிரமசிங்கபுரம் அருகே பன்றி திருடிய 3 பேர் சிக்கினர்.

Update: 2021-11-11 19:36 GMT
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடரங்குளத்தில் வசித்து வருபவர் முருகேஷ் (வயது 50). பன்றி மேய்க்கும் தொழிலாளி. சம்பவத்தன்று  பன்றிகளை கூண்டில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போத, பன்றிகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முருகேஷ் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

விசாரணையில் ஆலடியூரை சேர்ந்த ராஜா (30), மூலச்சியை சோ்ந்த பாலமுருகன் (24), இசக்கிமுத்து (24) உள்பட 5 பேர் பன்றிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜா, பாலமுருகன், இசக்கிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்