சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் மனு
சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் போலீசார் மனு செய்துள்ளனர்.
மதுரை,
திருச்சியை சேர்ந்தவர் சாட்டைதுரைமுருகன். இவர் யூடியூப்பில் சில சர்ச்சை வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து வந்த புகாரின்பேரில் அவர் மீது அவதூறு வழக்கை தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றிருந்தார்.
தற்போது அவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பனந்தாள் போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.