மழையூர் மலையகண்மாயில் உடைப்பு

மழையூர் மலையகண்மாயில் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-11 19:20 GMT
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் மலைய கண்மாய் குளம் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கறம்பக்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மலைய கண்மாய் நிரம்பி இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கண்மாய் கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள வயல்களில் புகுந்தது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக கண்மாய் உடைப்பு அடைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்மாய் உடைப்பால் வயல்களில் தண்ணீர் புகுந்திருப்பதை பார்வையிட்டனர். மேலும் கண்மாய் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்