பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு

Update: 2021-11-11 18:53 GMT
விருதுநகர்
விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமம் கிழக்குத் தெருவில் வசிப்பவர் பாண்டி. இவரது மனைவி சுப்புத்தாய்(வயது 55). கூலி வேலை செய்து வரும் இவர்கள் வீட்டிற்கு வெளியூரில் வசிக்கும் இவர்களது மகன் கார்த்திகேயனும், மருமகளும் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை சாத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை யாரோ தூங்கிக் கொண்டிருந்த சுப்புத்தாயின் காலை மிதிப்பது போல் உணர்ந்த அவர் விழித்து பார்த்தபோது ஒரு நபர் வீட்டை விட்டு வேகமாக வெளியேறுவதை பார்த்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது. இதனால் சுப்புதாய் சத்தம் போடவே அவரது கணவரும், மகனும், மருமகளும் எழுந்து வந்தனர். அவர்கள் வெளியே ஓடி சென்று பார்த்த போது வீட்டில் இருந்து வெளியேறிய நபர் வேகமாக ஓடி தப்பி விட்டார். சுப்புத்தாயின் கழுத்தில் கிடந்த சங்கிலியில் ஒரு பகுதி வீட்டிற்குள்ளேயே கிடந்தது. திருட்டுபோன சங்கிலியின் பகுதி 4 பவுன் என தெரியவந்தது அதன்பேரில் சுப்புத்தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்