வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 2-வது நாளாக நேற்றும் பரவலாக பெய்தது.
தொடர் மழையின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.