குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த சிறுதானிய பிஸ்ெகட் வழங்கும் திட்டம்
இரும்புச்சத்து நிறைந்த சிறுதானிய பிஸ்ெகட் வழங்கும் திட்டம்
ஆம்பூர்
மாதனூரை அடுத்த தோட்டளம் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் 2 வயதில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த சிறுதானிய பிஸ்ெகட் வழங்கும் முன்னோடி திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்ெகட்டுகளை வழங்கி முன்னோடி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, மாவட்ட குழு உறுப்பினர் சசிகலாசாந்தகுமார், மாதனூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் சாந்திசீனிவாசன், மாதனூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.