தண்ணீரை சிக்கனமாக பயன்படுத ஆணையாளர் வேண்டுகோள்
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறப்படும் பிரதான குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 30 வரையிலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ராணிப்பேட்டை நகராட்சி மூலமாக பாலாற்றில் இருந்தும், லாரி மூலமாகவும் குடி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.