விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் உரிமையாளர்

விஷம் சாப்பிட்டு தற்கொலை ஓட்டல் உரிமையாளர் செய்து கொண்டார்.

Update: 2021-11-11 18:03 GMT
ஆரணி

விஷம் சாப்பிட்டு தற்கொலை ஓட்டல் உரிமையாளர் செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமதுமொகைதீன் (வயது 40), ஓட்டல் உரிமையாளர். 

இவரின் மனைவி பாத்திமா. அவர்கள் கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாத்திமா உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மனைவியை நினைத்து மனவேதனை அடைந்த முகமதுமொகைதீன் கடந்த 29-ந்தேதி இரவு எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக மனைவியிடம் தெரிவித்தார்.

 அதிர்ச்சி அடைந்த பாத்திமா தனது கணவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு, தீவிர சிகிச்சை ெபற்ற அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் முகமதுமொகைதீனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படவே திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.

 அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இன்று முகமதுமொகைதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மனைவி பாத்திமா களம்பூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட முகமதுமொகைதீனுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்