விதைப்பந்து தயாரித்த மாணவர்கள்

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளியில் விதைப்பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.

Update: 2021-11-11 17:56 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விதைப்பந்து தயார் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து புளியமரம், வேப்பமரம், ஆமணக்கு, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகளை களிமண்ணில் புதைத்து விதைப்பந்து செய்தனர். இதையொட்டி தயாரான 50 ஆயிரம் விதைப்பந்துகள் மாணவ-மாணவிகள் மூலம் பல்வேறு இடங்களில் வீசப்பட உள்ளது. 

இதற்கிடையே ‘தளிர் மற்றும் துளிர்’ என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியை தாண்டிக்குடி அரசு காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் சவுந்திரராஜன், முதன்மை கல்வி அலுவலர் கருப்புச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி தாளாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயப்பிரகாஷ், துணை முதல்வர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்