பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தந்தை திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2021-11-11 17:55 GMT
கரூர்
பள்ளி மாணவன்
கரூர் அருகே உள்ள சின்ன ஆண்டான்கோவில் பசுபதி லேவுட் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சபரி (வயது 17). இவன் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்நிலையில் சரியாக படிக்காமல் சபரி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சபரியை அவனது தந்தை திட்டியதாக தெரிகிறது.
தற்கொலை 
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சபரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினான். இதைக்கண்ட உறவினர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக  கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதையடுத்து சபரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்