பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2021-11-11 17:11 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ராஜா நகர்  ராஜகணபதி கோவில் வளாகத்தில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.  மேலும் கடந்த 9-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத  பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் மேள, தாளம் முழங்க சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத  பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்