100 சதவீத இலக்கை எட்ட வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த முடிவு
100 சதவீத இலக்கை எட்ட வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.;
புதுச்சேரி, நவ.
100 சதவீத இலக்கை எட்ட வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டாலியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பூசி குறித்த கலந்தாய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டார்.
மேலும் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு, தடுப்பூசி பிரிவு துணை இயக்குனர் ராஜாம்பாள், மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு திட்டத்தின் மாநில திட்ட அலுவலர் குவின்சி மடோனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு
கூட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரி விளங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் புதுவையில் தடுப்பூசி நிலவரம் பற்றி ஆலோசிக்கப்பட்டது..
இதையடுத்து வீடு, வீடாக சென்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இருப்பதாகவும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.