கடலூர் மாவட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்மழை நீரில் மூழ்கி உள்ளன.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஆறு களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள வயல்களில் தண் ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும் பாலான இடங்களில் நெல் வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுபற்றி வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
21 ஆயிரம் ஏக்கர்
இதில் முதல் கட்டமாக ஆய்வு நடத்தியதில் 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 400 ஏக்கர் மக்காச்சோளம், 2500 ஏக்கர் உளுந்து, 1000 ஏக்கர் பருத்தி என 20 ஆயிரத்து 900 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இது தவிர மரவள்ளி கிழங்கு, கத்தரி, வெண்டை, மிளகாய் போன்ற காய்கறி பயிர்கள் 1500 ஏக்கர் பரப்பளவில் தண்ணீரில் மிதக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகும் நிலை ஏற்படும் என்றார். இருப்பினும் சில இடங்களில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழை ஓய்ந்த பிறகு தான் பயிர்ச்சேத விவரங்கள் தெரிய வரும் நிலை ஏற்பட்டுள்ளது.