திருச்செந்தூர் அருகே சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சாலையில் மலர்வளையம் வைத்து நூதன போராட்டம் நடந்தது

திருச்செந்தூர் அருகே சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சாலையில் மலர்வளையம் வைத்து நூதன போராட்டம் நடந்தது

Update: 2021-11-11 15:51 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் - பரமன்குறிச்சி சாலையில் உள்ள ராமசாமிபுரம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் இந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நூதன முறையில் சாலையில் மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், இந்து முன்னணி நகர பொது செயலாளர் முத்துராஜ், நகர தலைவர் மாயாண்டி, நகர துணை தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜூ, நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரிதிவிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்