தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்து போனார்
தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்து போனார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவருடைய மகன் அலெக்ஸ்ராஜ் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். இவர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் வடக்கு சங்கரப்பேரி விலக்கு அருகே சென்று கொண்டு இருந்தாராம். அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த லோடு ஆட்டோ மீது, மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அலெக்ஸ்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.