கோவை
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் வானதி சீனி வாசனும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுனனும் போட்டியிட்ட னர்.
பெரியகடைவீதியில் வானதிசீனிவாசன் பிரசாரம் செய்த போது அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணனுக் கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண்-5 ல் நடைபெற்றது. இதையொட்டி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் ரகுமான், விசாரணை யை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.